கணிதம், விஞ்ஞானம் மற்றும் உயர்தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு இலங்கையில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. அதனாலேயே இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை நியமிக்க தீர்மானித்தோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தங்கள் தொடர்பில் தெளிவு படுத்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.