இன்றைய திகதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அத்துடன் இந்த புற்றுநோய் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வளர்ச்சியடைந்த பிறகே அறிகுறிகளை காட்டுவதால் இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதே சமயத்தில் இந்த புற்றுநோய் வராமல் தடுக்க இயலும்.

மனிதர்களின் உடல் உறுப்புகளிலேயே மிக எளிதாக பாக்டீரியாக்களின் தொற்றுக்கு ஆளாகுவது பற்கள் தான். பற்களின் வழியாக உள்ளேப்புகும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமித் தொற்றுகள் உணவுக் குழாய் புற்றுநோயை உருவாக்குவதில் முதன்மையான காரணிகளாகத் திகழ்கிறது. அதனால் பற்களை சுத்தமாக பராமரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின் வாயை நன்றாக கொப்புளித்து பற்களுக்கிடையே ஏதேனும் உணவுத்துகள்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தவேண்டும். பற்குழிகள், பல் சொத்தை, ஈறு பலவீனம் போன்ற பாதிப்புகள் இருந்தால் அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு பற்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அத்துடன் திருமணமான தம்பதிகள் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிட்டாலும் கூட உடனடியாக பற்களையும், உதட்டையும் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். இதனால் கூட பாக்டீரியா தொற்று ஏற்படக்கூடும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை வலிதணிப்பு சிகிச்சை செய்து கொண்டு முழுமையான நிவாரணம் பெறலாம். இருப்பினும் பற்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் உணவுக்குழாய் புற்றுநோயை வருமுன் தடுப்பதே சிறந்தது.

டொக்டர் மணிகண்டன்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்