19 வய­துக்குட்­பட்­டோ­ருக்­கான காலி­று­திப்­போட்­டியில் நேபாளம் மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் நேற்­றை­ய­தினம் மோதி­யி­ருந்­தன. நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற நேபாளம் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 9 விக்­கெட்­டுக்­களை இழந்து 211ஓட்­டங்­க­ளைப்­பெற்­றுக்­கொண்­டது. அவ்­வணி சார்­பாக அணித்­த­லைவர் ரிஜால் 72ஓட்­டங்­களைப் பெற்றார். பங்­க­ளாதேஷ் பந்து வீச்சில் மொஹமட் சைபுடீன் அதி­க­பட்­ச­மாக 2 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் அணிக்கு ஆரம்பம் சிறப்­பாக அமைந்­தாலும் சீரான இடை­வெளியில் விக்­கெட்­டுக்கள் வீழ்ந்­தன. இதனால் 98 ஓட்­டங்­களைப் பெற்று தடு­மா­றிக்­கொண்­டி­ருந்­த­வேளை ஐந்­தா­வது விக்­கெட்­டுக்­காக இணைந்த சிஹர் ஹசன், மிராஸ் ஆகியோர் சிறப்­பான இணைப்­பாட்­டத்தை ஏற்­ப­டுத்தி போரா­டி­னார்கள்.

நிதா­ன­மாக ஆடிய சிஹர் ஹசன் (75), மிராஸ் (55) அரைச்­சதம் கடந்­த­தோடு ஆட்­ட­மி­ழக்­காது அணியின் வெற்­றி­யையும் உறு­தி­செய்­தனர். இதனால் 48.2 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை மட்­டுமே இழந்த பங்­க­ளாதேஷ் இலக்கை அடைந்து முதற்­த­ட­வை­யாக அரை­யி­று­திக்கு முன்­னே­றி­யது.

இதே­வேளை காலி­றுதி பிளே ஓப் போட்­டி­களில் கன­டாவை எதிர்த்­தா­டிய சிம்­பாவே 6 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­யீட்­டி­யி­ருந்­தது. மற்­றொ­ரு­போட்­டியில் ஆப்கானிஸ்தான் 9 விக்கெட்டுக்களை இழந்து பெற்ற 340 என்ற இமாலய இலக்கை நோக்கி போராடிய பீஜி 114 ஓட்டங்களை மட்டுமே பெற்று 226 ஓட்டங்களால் தோல்வியைக் கண்டிருந்தது.