மூத்த நடிகை பானுப்ரியா மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்திருப்பதால் பிசியாகியிருக்கிறார்.

யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘ப்யார் ப்ரேமா காதல் ’ என்ற படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார். மகளிர் மட்டும் படத்திற்கு பிறகு அவர் நடித்து வரும் படமிது. இதில் பிக்பாஸ் புகழ் ரைய்ஸா சுல்தான் மற்றும் ஹரீஷ் கல்யாண் ஆகியோர் ஜோடிகளாக நடிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இனி தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கிறார் நடிகை பானுப்ரியா.

தகவல் : சென்னை அலுவலகம்