தன்னை பிர­பல குடும்­ப­மொன்றைச் சேர்ந்த உறுப்­பினர் போன்று காண்­பித்து   இணை­யத்­த­ளத்தின் மூலம் 30 க்கு மேற்­பட்ட  பெண்­க­ளுடன்  காதல் தொடர்பை ஏற்­ப­டுத்தி அவர்­க­ளி­ட­மி­ருந்து விலை­யு­யர்ந்த பொருட்­களைக் கள­வாடி வந்த  நப­ரொ­ருவர்  நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட சம்­பவம் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

 பிரெட் ஜோசப் (30  வயது)  என்ற மேற்­படி நபர்  அவுஸ்­தி­ரே­லிய நியூ சவுத் வேல்ஸ் நீதி­மன்­றத்­தி­லான விசா­ரணை முடிந்து வெளியே­றிய போது  அவரை எதிர்­கொண்ட அவ­ரது  முன்னாள் காத­லி­க­ளான ஒரு தொகைப் பெண்கள்  அவரைத் தாக்க முயற்­சித்­தனர்.

இந்­நி­லையில் நீதி­மன்றக் காவ­லர்கள் அவரை அங்­கி­ருந்து பாது­காப்­பாக அழை த்துச் சென்­றனர். பிரெட் ஜோசப்பால் ஏமாற்­றப்­பட்ட பெண்­களின் தொகை அறியப்­பட்­ட­திலும் அதிகம் எனவும் அவரால் 50 க்கு மேற்­பட்ட பெண்கள் வரை ஏமாற்றப்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரி கள் தெரிவிக்கின்றனர்.