ரஷ்­யாவில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள 2018 ஆம் ஆண்டு கால்­பந்­தாட்ட உலகக் கிண்­ணத்தை கைப்­பற்ற ஆர்­ஜன்­டீ­னா­வுக்கு வாய்ப்பு உள்­ள­தாக நட்­சத்­திர வீரர் மெஸ்ஸி நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.

கால்­பந்து விளை­யாட்டில் இந்த தலை­மு­றையில் தலை­சி­றந்த வீரர்­களில் ஒரு­வ­ராக ஆர்­ஜன்­டி­னாவின் லயோனல் மெஸ்ஸி விளங்கி வரு­கிறார். பார்­சி­லோனா அணிக்­காக விளை­யாடும் அவர், பல்­வேறு சாத­னைகள் படைத்­துள்ளார். ஆனால், ஆர்­ஜன்­டீனா அணிக்­காக மிகப்­பெ­ரிய சம்­பியன் பட்­டத்தை அவர் வாங்கி கொடுத்­தது கிடை­யாது.

கடந்த 2005ஆ-ம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் தேசிய அணியில் காலெ­டுத்து வைத்த மெஸ்ஸி, 2006, 2010, 2014 ஆம் ஆண்­டு­களில் மூன்று உலகக் கிண்ணத் தொடர்­களில் விளை­யா­டி­யுள்ளார். 

இவ­ரது தலை­மை­யி­லான ஆர்­ஜன்­டீனா கடந்த 2014-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடை­பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. 

இதனால் மெஸ்ஸி சர்­வ­தேச போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அவ­ரது ரசி­கர்கள் கேட்­டுக்­கொண்­டதால் ஓய்வு முடிவை திரும்­பப்­பெற்றார்.

இந்­நி­லையில் ரஷ்ய உலகக் கிண்ணக் தொடர் குறித்து மெஸ்ஸி கூறு­கையில், ரஷ்ய உலகக் கிண்­ணத்தில் மற்ற அணிகள் எந்த மன­நி­லையில் வரு­கி­றார்கள் என்று எனக்குத் தெரி­யாது. ஆனால், நாங்கள் உலகக் கிண்­ணத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்­கத்­து­டன்தான் செல்­கிறோம். எப்­பொ­ழுதும் இந்த எண்ணத்துடன்தான் செல்வோம்.

கால்பந்து எனக்கு உலகக் கிண்ணத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது  என்றார்.