குடும்பத்தகராறு கைகலப்பில் நிறைவடைந்ததில் தடியால் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று அக்கரப்பத்தனையில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று மாலை அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்லெக்  தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு இறுதியில் கைகலப்பில் முடிவுற்றுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த நபரின் தலையில்  தடியால் கடுமையாகத் தாக்கியதில் குறித்த நபர் ஸ்தாத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது 35 வயதுடைய ராமையா பெரியசாமி என்ற 3 பிள்ளைகளின் தந்தையொருவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார்  தெரிவித்தனர்.