கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதுளை, லுனுகலை பகுதியில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு மாணவர்களும் போலி ஆவணங்களுடன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் இருவரும் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.