ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் அநேகமான பகுதிகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பதுளை, மஹியங்கணை பிரதேச சபைகள், பாணந்துறை நகர சபை, அகலவத்தை பிரதேச சபை, மகரகம நகர சபை, வெலிகம நகர சபை ஆகியவற்றில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மஹரகமவில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பெண்கள் பிரதிநிதித்துவம் உரிய முறையில் குறிப்பிடப்படாமையினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும்  வெலிகம பகுதிக்கான வேட்பு மனுவில், உரிய அதிகாரிகளின் உறுதிப்படுத்தல் இல்லாமையால்  நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.