லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெளலினா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் விக்கிரகத்திற்கு அணிவித்திருந்த பெறுமதிவாய்ந்த தங்க ஆபரணங்களும் உண்டியல் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக லிந்துல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு பூஜை முடிந்தவுடன் நடை சாத்திய பின்னரே கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கக் கூடுமென கோயில் பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை பூஜைக்காக கோவிலுக்குச் சென்ற போதே திருட்டு நடந்தேறியிருந்ததை குருக்கள் கண்டு பரிபாலன சபைக்கு தெரிவித்ததையடுத்து லிந்துல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று  பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.