சோமாலியாவில் தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 17 பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் இன்று  வழக்கம் போல் காலை உடற்பயிற்சிகள் நடந்து கொண்டிருந்த  போது தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார். 

இத் தாக்குதலில் 17 பொலிஸார் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு இத் தாக்குதலை நடாத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.