(ஆர்.யசி)

இலங்கையின் காலநிலை மீண்டும் மாற்றமடைய சாத்தியம் உள்ளதாகவும் வட-கிழக்கு பருவமழை இலங்கையை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாத இறுதி வரையில் மழைக் காலநிலையினை எதிர்பார்க்க முடியும் எனவும் வலியுர்த்தியுள்ளனர். 

Image result for காலநிலை virakesari

அண்மையில் வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை அடுத்து நாட்டின் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இலங்கையில் மழைக் காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  குறிப்பாக வட-கிழக்குப் பருவமழைக்குத்   ஏற்ற சூழ்நிலைகள் தென்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகவே அடுத்த சில தினங்களில் நாட்டில் மழைக் காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் விவசாயம் மற்றும்  மக்களின் நகர்வுகளுக்கு வட-கிழக்கு பருவக்காற்று மழைவீழ்ச்சி மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. அத்துடன்  மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும்  100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.