தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட தோட்டத்திலுள்ள வீடு ஒன்று இனந்தெரியாதோரால்  உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இத் திருட்டு சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்றிருக்கக் கூடுமெனவும்  திருட்டு இடம்பெற்ற சமயம் வீட்டில் எவரும் இருக்கவில்லையென்றும் வீட்டுரிமையாளர் வட்டகொட தோட்ட காரியாலயத்தில் கடமையில் இருந்ததாகவும் தெரிவித்தார். 

பகலுணவிற்காக வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அவதாணித்த உரிமையாளர் வட்டகொட  தோட்ட நிர்வாகத்திற்கும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்துள்ளார்.

வீட்டிலிருந்த 1 1/2 பவுண் தங்க நகையும்  20,000 ரூபா ரொக்கப் பணம் மற்றும் சில இலத்திரனியல் பொருட்களும் திருட்டு போயுள்ளதாக தலவாக்களை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.