இருபது வயது யுவதியை காதலிப்பதாகக் கூறி தவறான முறையில் பயன்படுத்திக்கொண்ட இளைஞனை பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதியை விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்ற இளைஞன், அவருக்கு பியர் அருந்தக் கொடுத்து போதையேற்றிய பின், அதே விடுதியில் வைத்து அவரை உறவுக்கு உட்படுத்தினார்.

இதை ஒளிப்பதிவு செய்துகொண்ட இளைஞர், அந்தக் காணொளியை ஃபேஸ்புக்கில் வெளியிடுவதாக அச்சுறுத்தி, தான் விரும்பியபோதெல்லாம் தான் விரும்பிய இடத்துக்கு அழைத்து கணவன்-மனைவியாக வாழ்க்கை நடத்தினார்.

இறுதியில், கடந்த வாரம் அவரது அழைப்பின் பேரில் குறித்த யுவதி தன் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். நள்ளிரவில் தமது மகளைக் காணாத பெற்றோர் தவித்துப் போயினர்.

அதிகாலையில் வீடு திரும்பிய யுவதி, தனது பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் விளக்கமாகக் கூறியுள்ளார். இதுபற்றி பொலிஸில் புகாரளிக்கப்பட்டதையடுத்து குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.