இன்றைய திகதியில் இளையதலைமுறையினர் தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டனர். அத்துடன் அவர்களின் நாளாந்த உணவுப்பழக்கத்தையும் மாற்றிக் கொண்டனர். இதனால் தண்ணீரைக் கூட போத்தல்களில் அடைத்து விற்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீர் ஆரோக்கியமானதா? பாதுகாப்பானதா? சுத்தமானதா? என்று கேட்டால் யாரும் அதற்கு உத்தரவாதம் தருவதில்லை. இந்நிலையில் மருத்துவர்கள் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரை பருகவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். உடனே எம்மவர் ஏன்? என்று கேட்பார்கள். அதற்கு அறிவியல் பூர்வமாக பதிலளிக்கவேண்டும் இல்லையெனில் இந்த காதில் வாங்கி கொண்டு அந்த காது வழியாக விட்டுவிடுவார்கள்.

பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைத்து விற்கப்படும் பெரும்பாலானவை குடிநீர் முறையாக சுத்திக்கரிக்கப்பட்டவையல்ல. இத்தகைய குடிநீருடன் புற்றுநோய் பரவுவதற்கு காரணியாக திகழும் டை எத்தில் ஹைட்ராக்சின் அமைன் என்ற வேதிப்பொருள் இதில் கலந்துவிடுகிறது.

இதனை பருகுபவர்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜன் என்ற சுரப்பியை இயல்பை விட அதிகளவில் சுரக்கவைக்கின்றன. இவை ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை பாதிக்கிறது. அத்துடன் அதன் வீரியத்தையும் இழக்கச் செய்வதில் பங்குவகிக்கின்றன. இதனால் ஆண் மலட்டுத்தன்மை உருவாகும். ஒரு சிலருக்கு நீரிழிவு நோய் தோன்றுவதற்கு இது கூட ஒரு நுழைவுவாயிலாக இருக்கலாம். அதனால் பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரை அருந்துவதை முற்றாகத்தவிர்க்கவேண்டும். வீட்டில் காய்ச்சி, ஆறிய தண்ணீரை குடிக்கவேண்டும்.

டொக்டர் டெய்ஸி சரண்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்