பொலிஸ் உத்தியோகத்தர் போல் வேடமணிந்து வந்த தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் பதினைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியான சம்பவம் சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றில் இன்று (14) காலை பயிற்சி அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போது, பொலிஸ் வேடமணிந்து வந்த தீவிரவாதியொருவரும் அணிவகுப்பில் கலந்துகொண்டார்.

பொருத்த நேரம் பார்த்து தனது உடலில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில், அணிவகுப்பில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களில் பதினைந்து பேர் உடல் சிதறி பலியாகினர்.

மேலும் பதினேழு பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.