மாத்தளை இந்து தேசிய கல்லூரியின் மாணவர்களான வி. கேஷான் குமார், வி. விஜித குமார் ஆகிய இருவரும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழவினால் விவசாய துறையில் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான போட்டிகளில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்று சர்வதேச ரீதியான போட்டிகளில் பங்குபற்ற தாய்வான் சென்றிருந்தனர். 

கடந்த 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை நடைபெற்ற இப்போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள் நாட்டுக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் சர்வதேச ரீதியில் தங்கப்பதக்கமும், சிறப்பு பரிசும் பெற்றுள்ளார்கள்.

இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் மூலம் சர்வதேச போட்டி நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக 13 மாணவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 

இதில் 5 தங்கங்களும், 6 வெள்ளிப்பதக்கங்களையும் இலங்கை வெற்றிக்கொண்டது. 

இதன்போது, மாத்தளை இந்து தேசிய கல்லூரி மாணவர்கள் இருவரும் பழம் பறிக்கும் கருவியை நிர்மாணித்து வெற்றிப்பெற்றுள்ளனர்.

மொத்தமாக 29 உலக நாடுகளிலிருந்து 300 அதிகமானவர்கள் இப்போட்டி தொடரில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 

மாத்தளை இந்து தேசிய கல்லூரியின் மாணவர்களான இவர்கள் நாட்டிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்க அவர்களுக்கு உறுதுணையாக பாடசாலையின் அதிபர்  எஸ். கணேசமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.