அமெரிக்காவின் அலபமா மாகாணத்துக்கான செனட் உறுப்பினர் தேர்தலில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டவ் ஜோன்ஸ்  வெற்றி பெற்றுள்ளார்.

அலபமா மாகாணம் குடியரசு கட்சியின் கோட்டையாக விளங்குகிறது.

இந்நிலையில் இங்கு நடைபெற்ற செனட் உறுப்பினர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டவ் ஜோன்ஸ் 49.92 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் 25 ஆண்டுகளில் அலபமா மாகாணத்தில் வெற்றி பெற்ற முதல் செனட் உறுப்பினர் என்ற பெயர் பெற்றுள்ளார்.

குடியரசு கட்சி வேட்பாளர் ராய் மூரி 48.38 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ராய் மீது சமீபத்தில் பாலியல் புகார் எழுந்தது. எனினும் ட்ரம்ப் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் ராய் தோல்வி அடைந்திருப்பது ட்ரம்புக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என அமெரிக்க அரசில் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்