லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனா தோட்டத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் இன்று அதிகாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.  

குறித்த பெண் நீர் பாய்ச்சும் இயந்திரத்தின் மின் இணைப்பை துண்டிக்காது நீர் எடுக்க சென்ற போதே இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பலியான பெண் 3 பிள்ளைகளின் தாய் ஆவார்.

உயிரிழந்த பெண்ணின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக லிந்துல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் லிந்துல  பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.