நடைபெறவுள்ள 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் விண்ணப்பங்களை ஏற்பதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் பன்னிரண்டு மணியுடன் நிறைவுபெறுவதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய இணை தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட், மீதமுள்ள 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்களின் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் பதினெட்டாம் திகதி ஆரம்பமாகும் என்று கூறினார்.