இங்­கி­லாந்து அணி ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் தோற்­ற­தற்கு இன்­றைய போட்­டியில் பதி­லடி கொடுக்­குமா என்ற எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணி அவுஸ்­தி­ரே­லி­யாவில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது. இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் அவுஸ்­தி­ரே­லியா 2–-0 என்ற கணக்கில் முன்­னி­லையில் உள்­ளது.

பிரிஸ்­பேனில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்­திலும், அடி­லெய்ட்டில் நடை­பெற்ற இரண்­டா­வது டெஸ்டில் 120 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்­திலும் அவுஸ்­தி­ரே­லியா வெற்றி பெற்­றி­ருந்­தது.

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் மூன்­றா­வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது.

முதல் 2 டெஸ்ட் போட்­டி­களில் தோற்ற இங்­கி­லாந்து அணி இன்­றைய போட்­டி­யி­லா­வது பதி­லடி கொடுக்­குமா என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும் தொடரை இழக்­காமல் இருக்க இங்­கி­லாந்து வெற்றி பெறு­வது அவ­சி­ய­மா­கி­றது.

முன்னாள் தலைவர் குக்­குக்கு இந்த போட்டி 150-ஆவது டெஸ்­டாகும். இந்த மைல்­கல்லை தொடும் முதல் இங்­கி­லாந்து வீரர் இவர்தான். 

மறுமுனையில் ஆஸி. இந்த டெஸ்டில் வென்று ஹெட்ரிக் சாதனையுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது.