இலங்­கையில் சீன அர­சாங்­கத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும்  கொழும்புத்  துறை­முக நகர் திட்­டத்தின் ஒரு கட்­ட­மாக கொழும்பு – கொள்­ளுப்­பிட்டி புகை­யி­ரத நிலை­யத்தில் இருந்து கொழும்பு சைத்­திய வீதி வரையில் துறை­முக நகரம்  ஊடாக பிர­வே­சிக்­கின்ற நிலக்கீழ் கடல் வீதி மார்க்­கத்­தினை நீடிக்கும் வேலைத்­திட்­டத்­தினை துறை­முக நகர வேலைத்­திட்ட நிறு­வ­னத்­துடன் இணைந்து அரச தனி

யார் ஒத்­து­ழைப்பு வேலைத்­திட்­ட­மாக செயற்­ப­டு­வ­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் இலங்கை அர­சாங்கம் கைச்­சாத்­தி­ட­வுள்­ளது. 

இது குறித்து பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை பத்­திரம் அமைச்­ச­ர­வையில் அங்­கீ­காரம் பெற்­றுள்­ளது. 

அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தியில் இருந்து இந்த வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க தயா­ராகி வரு­வ­தா­கவும், துறை­முக நகர் நிரப்பு வேலைகள் முடி­வுக்கு வந்­த­வுடன் அடுத்த கட்­ட­மாக நிலக்கீழ் பாதையினை அமைக்கும் முதற்கட்ட நகர்வுகள் இடம் பெறும் என அரசாங்கம் அறிவித்துள்   ளது.