ஆறு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஜனாதிபதி நியமித்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்புத்துறை செயலாளர் ஜகத் பி.விஜேவீர மீன்பிடி மற்றும் கடல்வள அபிவிருத்தித் துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமிக்கப்பட்ட ஏனைய செயலாளர்கள் விபரம்:

நீதித் துறை அமைச்சு - எம்.அதிகாரி

நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோகம் - டி.ஜி.எம்.வி.ஹப்புவாரச்சி

சட்டம், ஒழுங்கு மற்றும் தென்னக அபிவிருத்தி - பத்மசிறி ஜயமான்ன

விசேட பணிகள் - எம்.எம்.பி.கே.மாயாதுன்ன

தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரம் - ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல