இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பதற்காக ராமரால் கட்டப்பட்டதாக கூறப்படும் ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல்  தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ராமர் சேது பாலம் புராணங்களின் படி இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய வான படையினரை கொண்டு ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்த பாலம் ராமேஸ்வரத்தில் 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம் இயற்கையாக அமைந்ததா? அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? என்பதை கண்டறிய இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அறிவியல் தொலைக்காட்சி  நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2 நிமிட அந்த ஆவணபடத்தில்,

"ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ்பிரிட்ஜ் நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம்" என கூறியுள்ளது.