மொனராகலை - மெதகம பனிக்கியாவத்தை பகுதியில் நேற்றிரவு பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் கொலை செய்யப்பட்ட 38 வயதுடைய பெண்ணும் அவரது தாயாராரும் வசித்து வந்துள்ளனர்.

நேற்றிரவு வீட்டிற்குள் அத்து மீறி பிரவேசித்த நபர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாகவும், அவரின் தாயாரையும் கத்தியால் வெட்டி பாரிய காயத்திற்குள்ளாக்கியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த  தாய் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் குறித்த கொலை சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.