கால்­பந்து விளை­யாட்டின் ஜாம்­பவான் என்று புக­ழப்­படும் ஆர்­ஜன்­டீனா வீரர் மர­டோனா, ‘தான் கால்­பந்தின் கடவுள் அல்ல’ என்று கூறி­யுள்ளார்.

ஆர்­ஜன்­டீனா அணியின் முன்னாள் கால்­பந்து வீரர் டியேகோ மர­டோனா. 1986ஆ-ம் ஆண்டு இவ­ரது தலை­மையில் ஆர்­ஜன்­டீனா உலகக் கிண்­ணத்தை வென்­றது. தனது அபார ஆட்­டத்தால் தனி ஒரு மனி­த­னாக நின்று கிண்­ணத்தை வென்று கொடுத்தார். 

கால்­பந்து வர­லாற்றில் மர­டோனாவை

ஜாம்­பவான், கால்­பந்து கடவுள் என்­றெல்லாம் அழைப்­ப­துண்டு. தற்­போது அவர் இந்­தி­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ளார். அங்­குள்ள அவரது 12 அடி உயர சிலையை அவரே திறந்து வைத்தார்.

பின்னர் அவர் உரையாற்றுகையில், நான் கால்­பந்தின் கடவுள் அல்ல. ஆனால், ஒரு சாதா­ரண கால்­பந்து வீரர். கொல்­கத்­தா­விற்கு மீண்டும் ஒரு­முறை வந்­ததில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். என்­னு­டைய சிலையை நானே திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார்.