யுத்தம் முடி­வ­டைந்­தாலும்   மக்­களின் காயங்­களை  ஆற்­று­வ­தற்கு  பல வரு­டங்கள் எடுக்கும். இலங்கை ஏற்­க­னவே இந்த விட­யத்தில் பல   செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்று  நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர்   மங்­கள சம­ர­வீர  தெரி­வித்தார்.  

இந்த சவால்­களை  வெற்றி  கொள்­வ­தற்­காக இலங்கை    அர்ப்­ப­ணிப்­புடன்   செயற்­படும் என் றும் அவர் குறிப்­பிட்டார். 

இலங்­கைக்­கான ஜேர்மன் தூது­வரின் இல்­லத்தில் நேற்று நடை­பெற்ற    நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

இந்த செயற்­பாட்டை அர­சாங்­கத்­தினால்  தனித்து செய்ய முடி­யாது.   அர­சாங்­கத்­தினால் தனித்து அனைத்து வெற்­றி­யையும் பெற முடி­யாது. யுத்தம் முடி­வ­டைந்­தாலும்   மக்­களின் காயங்­களை  ஆற்­று­வ­தற்கு  பல வரு­டங்கள் எடுக்கும். இலங்கை ஏற்­க­னவே இந்த விட­யத்தில் பல   செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளது.  இந்த சவால்களை  வெற்றி  கொள்வதற்காக இலங்கை    அர்ப்பணிப்புடன்   செயற்படும்   என்றார்.