அதி­கா­ரப்­ப­கிர்வு மூல­மாக மாத்­திரம் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது ஒரு­போதும் சாத்­தி­ய­மா­காது. கடந்த கால தவ­று­களை திரும்­பிப்­பார்­த்து விடப்­பட்ட தவ­றுகள் அனைத்தும் சரி­செய்­யப்­பட வேண்டும் என தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். 

வடக்­கிலும், தெற்­கிலும் இருந்து நாட்­ டினை பிரிக்கும் எந்த செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அதனை நாம் தடுத்து நாட்­டினை ஒன்­றி­ணைப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஒன்­றி­ணைத்த மதச் சக­வாழ்வு மாநாடு நேற்று கொழும்பு பண்­டா­ர­ந­யாக ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் அமைச்சர் மனோ கணேசன் உரை­யாற்றும் போதே இதனைத் தெரி­வித்தார்.

பெளத்த  மாநா­யக தேரர்கள், இந்து மதத் தலை­வர்கள், கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய மதத் தலை­வர்கள் மற்றும் அர­சியல் பிர­மு­கர்கள் சிவில் மற்றும் சர்­வ­தேச பிர­தி­நி­திகள் என அனை­வரும் கலந்­து­கொண்ட   இந்த மாநாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறப்பு அதி­தி­யாக கலந்­து­கொண்டார்.  

மாநாட்டில் அமைச்சர் மேலும் உரை­யாற்­று­கையில் 

நாட்டின் ஆட்­சி­யினை சரி­யான பாதையில் கொண்டு செல்ல அர­சாங்­க­மாக நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். அர­சியல் அமைப்­பினை அடிப்­ப­டை­யாக கொண்டு நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். ஜனா­தி­பதி தலை­மையில் அரச இயந்­திரம் செயற்­பட்டு வரு­கின்­றது. எனினும் அதையும் தாண்டி மதத் தலை­வர்­களின் தலை­மைத்­து­வமும்,  வழி­காட்­டலும் எமக்கு தேவைப்­ப­டு­கின்­றது. நாம் மத சக­வாழ்வு மாநாட்­டினை நடத்தும் நிலையில் இதில் முக்­கி­ய­மான சில விட­யங்­களை கருத்தில் கொண்டு செயற்­பட்டு வரு­கின்றோம். குறிப்­பாக " அர­சியல் அதி­கார இலக்கில் ஆயுதம் தூக்­கா­தி­ருப்போம்" , " இலங்­கையர் எம் அடை­யாளம் பன்­மைத்­துவம் எம் சக்தி ", " வர­லாற்றை திரும்­பிப்பார், தவ­று­களைத் திருத்­திக்கொள்" " ஓர் நாட்டில் அனை­வ­ருக்கும் அதி­காரம்" என்ற பிர­தான நான்கு கார­ணி­களை தொனிப்­பொ­ரு­ளாக கொண்டே நாம் எமது பய­ணத்­தினை ஆரம்­பித்­துள்ளோம். 

இந்த நாட்டின் உரி­மை­களை வென்­று­கொள்ள வடக்­கிலும் சரி தெற்­கிலும் சரி இனி­யொ­ரு­போதும் ஆயுதம் எந்தக் கூடாது என்­பது எமது இலக்­காகும்.  அத்­துடன் எமது வர­லாற்றை திரும்­பிப்­பார்த்தல் அதில் தவ­ற­விட்ட விட­யங்­களை திருத்­திக்­கொண்டு சரி­யான பாதையில் பய­ணிக்க வேண்டும் என்ற கட்­டா­யமும் உள்­ளது. மேலும்  ஒரே நாட்­டுக்குள் அதி­கா­ரங்­களை பகிர்ந்­து­கொண்டு முன்­னோக்கி செல்ல வேண்டும். நாட்டில் பிரி­வினை, இன­வாதம், ஆயுத மோதல் அனைத்­தையும் முடி­வுக்கு கொண்­டு­வந்து அதி­கா­ரங்­களை அனை­வ­ருக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும். கடந்த காலங்­களில் ஆட்­சியில் இருந்த அர­சாங்­கங்கள் கொழும்பை அடிப்­ப­டை­யாக  கொண்டு அதி­கா­ரங்­களை குவித்­துக்­கொண்டு ஆட்சி செய்­தது. 

இப்­போது அதி­கா­ரங்­களை பர­வ­லாக்கி ஆட்சி செய்து வரு­கின்றோம். அதி­கார பகிர்வு தான் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு என்றால் அது ஒரு­போதும் சாத்­தியம் ஆகாது. அதை என்னால் ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது. ஜன­நா­யக நாட்டில் மேற்­கூ­றப்­பட்ட நான்கு விட­யங்­களும் உள்­ள­டக்­கப்­பட  வேண்டும் அப்­போதே பயணம் இல­கு­வாகும். 

தேசியக் கோடி,  தேசிய அடை­யாளம், அர­சியல் அமைப்பு என்­பதை  அடிப்­ப­டை­யாக கொண்டே அனை­வரும் செயற்­பட வேண்டும். ஜனா­தி­பதி முதல் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் வரை இதனை ஏற்­று­கொள்ள வேண்டும். எனினும் அண்­மையில் வடக்கில் மாகா­ண­சபை உறுப்­பினர் ஒருவர் தேசிய கோடியை ஏற்ற  மாட்டேன் என்ற வகையில் செயற்­பட்­டி­ருந்தார். இது மிகவும் மோச­மான செயற்­பா­டாகும். நாம் அப்­போதே இதனைக் கண்­டித்­தி­ருந்தேன். அதேபோல் தெற்­கிலும் சில காலத்­திற்கு முன்னர் சிறு­பான்மை மக்­களின் அடை­யா­ளங்­களை நீக்­கிய தேசிய கொடி­யாக ஒன்றை ஏந்­தி­யி­ருந்­தனர். இதுவும் கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும். வடக்­கிலும் தெற்­கிலும் இன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டுகள் உள்­ளன. அர­சியல் தீவி­ர­வா­திகள், இன­வா­திகள், அடிப்­ப­டை­வா­திகள் இரு தரப்­பிலும் இருந்து செயற்­பட்டு வரு­கின்­றனர். 

எனினும் நாம் நடு­நி­லை­யாக இருந்து நாட்­டினை பாது­காக்கும் செயற்­பாட்­டினை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இதில் மதத் தலை­வர்கள் அனை­வ­ரதும் ஆலோ­சனை, ஒத்­து­ழைப்­புகள் எமக்கு அவ­சியம். இத­னையே ஜனா­தி­பதி தொடர்ச்­சி­யாக எமக்கு வலி­யு­றுத்தி வரு­கின்றார். ஆகவே அர­சாங்­கத்தின் பய­ணத்தில் மதத் தலை­வர்கள் அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்­பினை பெற்றுக்கொண்டு பலமான அரசாங்கத்தினை கொண்டு செல்ல வேண்டும் என்றே நாம் நினைக்கின்றோம்.  வடக்கிலோ தெற்கிலோ நாட்டினை பிளவுபடுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அதனை நாம் வேடிக்கை பார்க்கப்போவதில்லை. பிரிவினைவாதிகள் எத்தனிக்கும் ஒவ்வொரு சந்தப்பத்திலும் நாம் நாட்டினை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அதில் நாம் அனைவரும் முன்னின்று செயற்படுவோம் என்றார்.