அர­சாங்கம் வடக்கில் ஒரு சட்­டத்­தையும் தெற்கில் மற்­று­மொரு சட்­டத்­தையும் அமுல்­ப­டுத்­து­கி­ன்றது. எனவே, இது மீண்டும் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் யுகம் உரு­வா­வ­தற்கு வழி­வகை செய்யும் என கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஸ்ரீலங்கா பொதுஜ முன்­ன­ணியின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தெற்கு மக்கள் மத்­தள விமான நிலை­யத்தைப் பாது­காப்­ப­தற்கு முன்­னின்று செயற்­பட்­ட­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மூவரை கைது­செய்து சிறையில் அடைத்­தனர். இதே­வேளை வடக்கில் தேசிய கொடியை ஏற்­று­வ­தற்கும் இட­ம­ளிப்­ப­தில்லை. மாகாண சபை அமைச்சர் ஒரு­வரே தேசிய கொடியை ஏற்­ற­மு­டி­யாது எனக்­கு­றிப்­பிட்­டுள்ளார். எனினும் அவ­ருக்கு எதி­ராக இது­வ­ரையில் நட­வ­டிக்கை இல்லை.

இதே­வேளை கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்­றின்­போது தேசி­யக்­கொ­டியில் சிறு மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­தா­கக்­கூறி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்றம் சென்­றனர். எனவே சட்டம் வடக்கில் ஒரு வித­மா­கவும் தெற்கில் மற்­று­மொ­ரு­வி­த­மா­கவும் நடை முறைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ஆகவே இது தொடர்பில் சக­லரும் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. 

இது­போன்ற செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­கவே கூட்டு எதிர்க்­கட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கி­றது. எமக்கு தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை. நாம் கொள்கை ரீதி­யி­லான தீர்­மா­னத்­தி­லேயே பய­ணிக்­கிறோம்.

அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் செய்­யப்­டு­கி­றது. இவ்­வா­றான  நிலையில் தேர்தல் சட்டம் பேணப்­பட வேண்டும். எனினும் வெற்­றிடம் நிலவும் கிரா­ம­சே­வகர் பிரி­வு­க­ளுக்கு கிராம சேவ­கர்­களை நிய­மிப்­ப­தற்­கென போட்டிப் பரீட்சை நடத்­தப்­பட்­ட­துடன் பினனர் நேர்­மு­கப்­ப­ரீட்­சையும் நடத்­தப்­பட்­டுள்­ளது. 

எனினும் அவர்­க­ளுக்கு நிய­மனம் வழங்­காது, ஓய்­வு­பெற்ற கிரா­ம­சே­வ­கர்­களில் தெரி­வு­செய்­யப்­பட்ட சிலரை மூன்று மாத காலாத்­திற்கு ஒப்­பந்த அடிப்­ப­டையில் கட­மை­யாற்­று­வ­தற்கு சேவையில் இணைத்­து­கொள்ள அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது.

அவ்­வாறு சேவையில் இணைத்­துக்­கொள்­ள­வுள்ள கிராம சேவகர்கள் தற்போது அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மாகாண சபை உறுப்பினர்களின் செயாளர்களாக கடமையாற்றுகின்றனர். ஆகவே இது தொடர்பில் நாளை (இன்று) தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.