இவ்வாண்டு, கூகிள் இணையத் தேடலில் ‘செக்ஸ்’ என்ற ஆங்கில வார்த்தையை அதிகளவில் தேடிய நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை மூன்றாமிடத்துக்குப் ‘பின்தள்ளப்பட்டுள்ளது’. கடந்த ஆண்டு இதே பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து ‘அசத்தி’ இருந்தது இலங்கை.

ஆனால், இலங்கையிடம் இருந்த அந்தப் புகழை பங்களாதேஷ் இவ்வாண்டு தட்டிப் பறித்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தச் சாதனையில், கடந்த ஆண்டு ஹோமகமவிலேயே நகர அளவில் இந்த வார்த்தைக்கான தேடல் அதிகமாக இருந்தது. எனினும் இவ்வாண்டு ராஜாங்கனை நகரம் அந்தச் சாதனையைத் தனதாக்கிக்கொண்டது.