இலங்கை கிரிக்கெட் சபை எதிர்வரும் ஜனவரி மாதம் ஏழாம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்தத் தீர்மானித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இக்கூட்டத்தில், தற்போது நடைமுறையில் உள்ள இலங்கை கிரிக்கெட் சட்டதிட்டங்களில் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை அமுல்படுத்துவது குறித்துப் பேசப்படவுள்ளது.

மேலும் உப தலைவராகப் பதவி வகித்த ஜயந்த தர்மதாசவின் பதவி விலகலையடுத்து, முன்னாள் உப செயலாளர் மோகன் டி சில்வா அப்பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு புதிய பொதுச் செயலாளர் ஒருவரை இக்கூட்டத்தின்போது தேர்ந்தெடுக்கவும் இலங்கை கிரிக்கெட் முடிவுசெய்துள்ளது.

இவை தவிர, உள்நாட்டுப் போட்டி விதிமுறைகள் மற்றும் போட்டிகளின் நிலை குறித்தும் பேசப்படும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.