சீனாவில் நபர் ஒருவர் ஆளையே மறைக்கும் ஆடை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

சீனாவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கிரிமினல் புலனாய்வு பிரிவு துணைத்தலைவரான Chen Shiqu  என்பவர் கடந்த  4ஆம் திகதி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டிருந்தார்.

அதில் அணிந்திருக்கும் உடை quantum of invisibility cloak  எனவும் குவாண்டம் தொழில்நுட்பம் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆடை கண்டிப்பாக இராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் தோன்றும் நபர் மரம், புதர்களுக்கு நடுவே படிக்கட்டுகளில் நடந்து வருகிறார். பெரிய  அளவிளான பொலிதீன் கவர் போன்ற ஒன்றை எடுத்து விரிக்கிறார்.

அப்போது  பொலிதீன் கவர் மறைத்த அந்த நபரின் உடல் பகுதிகள் தெரியவில்லை. அவருக்கு பின்னால் உள்ள மரம், செடி, புதர்கள் மட்டும் தெரிகின்றன.

அதன் பின் கழுத்துக்கு கீழ் பொலிதீன் கவரை அவர் பிடிக்க தலைமட்டும் தெரிகிறது. பொலிதீன் கவரை வைத்து 360 டிகிரியில் சுற்றுகிறார். சரியாக அந்த கவர் மறைக்கும் உடல் பகுதிகள் மட்டும் தெரியவில்லை.

இந்த வீடியோவை 21.4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

ஆனால் வீடியோ எடிட்டிங் நிபுணர்களோ quantum of invisibility cloak ஆடைக்கு வாய்ப்பே இல்லை எனவும் இதை அவர்கள் நன்றாக எடிட்டிங் செய்து புரளியை கிளப்பி விடுகின்றனர் என்று கூறியுள்ளனர்.