சட்டவிரோதமாக டுபாயிலிருந்து தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 34 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரண்டு கோடியே 96 இலட்சத்து 86,696 ரூபா பெறுமதியான குறித்த தங்க நகைகள் 5.08 கிலோ நிறையுடையது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொக்கலட்டுகள் கொண்டு வரப்பட்ட பையில் மிகவும் சூட்சுமமாக மறைத்து குறித்த தங்க நகைகள் கொண்டு வரப்பட்டதாக பிரதி சுங்க பணிப்பளார் ஜகத் ஒபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவராகும். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.