உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிக்க, ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் ஒரு நகரசபை உட்பட 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. 

அதில் வவுனியா நகரசபைக்கு 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 20 ஆயிரத்து 300 வாக்காளர்களும், வவுனியா வடக்கு பிரதேச சபையில் 23 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 12 அயிரத்து 166 வாக்காளர்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச சபைக்கு 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 16 ஆயிரத்து 680 வாக்காளர்களும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு  55 ஆயிரத்து 5 வாக்காளர்களும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 10 ஆயிரத்து 448 வாக்களாருமாக 103 அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.