சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 11 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 22,960 சிகரெட்டுகளுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image result for சட்டவிரோத சிகரெட்டு virakesari

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

டுபாய் நாட்டில் இருந்து வந்த இவரின் பயணப் பையில் இருந்து இந்த சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளை சுங்கப்பிரிவினர் கையகப்படுத்தியதுடன்,  குறித்த நபருக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.