எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சி இன்று  மாலை 3 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோண் தலைமையில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் போது கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால, மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.டிலான், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிலுவை பீரிஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

'சிறிலங்கா பொதுஜன பெரமுன' கட்சி மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை  ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.