காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதாக இன்று  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 17 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார். சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல்கள் நடந்து முடிந்ததையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு கடந்த  முதலாம் திகதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

ராகுல் காந்தி கடந்த 4ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து  மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் ராகுலை தலைவர் பதவிக்கு அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டன.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 16ஆம் திகதி தேர்தல் நடக்கும் என்றும் 19ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

மனுக்களை மீளப் பெற இன்று கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ராகுலைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.