மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.!

Published By: Robert

11 Dec, 2017 | 04:28 PM
image

உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை பிரிப்பு விடயத்தில் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த லவர்சிலிப் சின்னகாடு தோட்டத்தை பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இங்கு மாநகர சபைக்கு சேர்ந்து இருக்கப்பட வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபையுடன் மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி அத்தோட்ட மக்கள் இன்று வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நுவரெலியா பொரலந்த நகரத்தில் அத்தோட்ட மக்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலயங்கள் மேற்கொண்டனர்.

பெரிதாக இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க எத்தணித்த போதிலும், 50ற்கும் மேற்பட்ட மக்களே இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நுவரெலியா மாநகர சபையில் நேரடியாக சலுகைகளை பெற்று வந்த சுமார் 1000 வாக்களர்கள் நுவரெலியா பிரதேச சபைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தாங்களை மாத்திரம் மாற்றுவதன் மூலம் தங்களது அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22