இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகை கேரள கஞ்சா காருடன் மீட்பு : ஒருவர் கைது

Published By: Priyatharshan

11 Dec, 2017 | 03:58 PM
image

( ஆ.பிரபுராவ் )

இலங்கைக்கு கடத்த விருந்த ரூபா 75 இலட்சம் மதிப்பிலான கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள இந்திய பொலிஸார் ஒருவரை கைது செய்து முக்கிய கடத்தல்காரை தேடிவருகின்றனர்.

 

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகொன்றில் கேரள கஞ்சா கடத்த இருப்பதாக  பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட கடலோரப்குதிகளில் மாவட்ட சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் கியூபிரிவு பொலிஸார் தீவிர  சோதகையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது மண்டபம் அருகே பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதியை நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்த பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் கார் நிற்காமல் சென்றதையடுத்து பொலிஸார் விரட்டி சென்று  காரை மடக்கி பிடித்து மண்டபம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.   

பறிமுதல் செய்யப்பட்ட காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 75 இலட்சம் மதிப்பிலான 85 பார்சலில் இருந்து 165 கிலோ  கேரள கஞ்சாவை பறிமுதல் செய்த பொஸார் தொண்டி பகுதியைச் சேர்ந்த அலி என்பவரை கைது செய்து காரில் இருந்து தப்பிச் சென்றவர் யார் எனவும் முக்கிய கடத்தல்காரர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56