அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் உள்ள சின் சிட்டியில் நேற்றிரவு  நடைபெற்ற குத்துச் சண்டையில் இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் மெக்சிகோவின் பிரான்சிகோ வர்காஸ் – இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் மோதினர்.

உலக சாம்பியனுக்காக நடைபெற்ற இந்த போட்டியில் மெக்சிகோ வீரரின் தாக்குதலுக்கு இங்கிலாந்து வீரர் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். 9 ஆவது சுற்றின்போது இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியது.

இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் ஸ்டீபன் ஸ்மித் அடுத்த சுற்றிற்கு தயாரானார்.

ஆனால் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இதனால் போட்டி அத்துடன் நிறுத்தப்பட்டது. மேலும் மெக்சிகோ வீரர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.