மூன்றில் இரண்டு பெரும்­பான்மை சபை­களை ஐ.தே.க. கைப்­பற்றும்

Published By: Robert

11 Dec, 2017 | 09:52 AM
image

பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் வரவு, செலவுத்திட்டம் வெற்றி பெற்­றது போல ஐக்­கிய தேசிய கட்சி உள்ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லிலும் நாட்டின் மூன்றில் இரண்டு சபை­க­ளையும் கைப்­பற்­று­வது நிச்­சயம்.  அதற்கு முக்­கிய கார­ண­மாக மீண்டும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட உள்­ள­தையும் குறிப்­பி­டலாம்  என்று   கல்வி இரா­ஜாங்க அமைச்­சரும்  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதி தலை­வ­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார்.

 இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்­ணனின் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதியில் இருந்து அம்­ப­க­முவ பகு­திக்­கான பொருட்கள் கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று கொட்­ட­கலை ஸ்ரீ சித்­தி­வி­நா­யகர் ஆலய மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.  அந் நிகழ் வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே

அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இந்­நி­கழ்வில்  மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தேசிய அமைப்­பா­ளரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான ஆர்.ராஜாராம், மலை­யக தொழி­லாளர் முன்­ன­ணியின் நிதிச் செய­லாளர் விஸ்­வ­நாதன் புஸ்பா உட்­பட பய­னா­ளி­களும் கலந்து கொண்­டனர்.

 இரா­ஜாங்க அமைச்சர்  மேலும் உரை­யாற்­று­கையில்,

புதிய தேர்தல் முறைப்­படி இந்த தேர்­தலை எமது நாட்டு மக்கள் சந்­திக்­கின்­றார்கள். எங்­க­ளு­டைய பெருந்­தோட்ட மக்கள் இந்த தேர்­தலை எங்­க­ளுக்கு சாத­க­மாக மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த தேர்­தலில் ஜனா­தி­ப­தி­யையோ அல்­லது பிர­த­ம­ரையோ மாற்றி யமைக்க முடி­யாது. இன்னும் மூன்று வரு­டங்­க­ளுக்கு இந்த நல்­லாட்சி அர­சாங்­கமே தொடரும். எனவே அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு தங்­க­ளு­டைய வாக்­கு­களை வழங்­கு­வதன் மூல­மாக அர­சாங்­கத்தின் முழு­மை­யான பய­னையும் நாங்­களும் பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்க்­கட்­சியில் இருக்­கின்­ற­வர்­க­ளுக்கோ அல்­லது வேறு சுயேச்சை குழுக்­க­ளுக்கோ வாக்­க­ளிப்­பது எந்­த­வி­த­மான ஒரு பய­னையும்  தராது. எனவே நாங்கள் புத்­தி­சா­லித்­த­ன­மாக சிந்­தித்து செயற்­பட வேண்டும். தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணிக்கு மீண்டும் ஆத­ரவை வழங்­கு­வதன் மூலம் நாம் முழு­மை­யான பயனை பெற்றுக்கொள்ள முடியும். 

எதிர்­காலத்திட்­டங்­களில் நாங்கள் முழு­மை­யாக உள்வாங்கப்பட வேண்டுமானால் எங்களுடைய உறுப்பினர்கள் தலைவர் களாக, உப தலைவர்களாக வர வேண்டும். இதன் மூலம் எமது அபிவிருத்தியை வேக மாக முன்னெடுக்க முடியும். அரசாங்க ஆத ரவு இல்லாமல் நாம் எதனையும் செய்ய முடியாது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38