தேங்­காயின் கட்­டுப்­பாட்டு விலை 75 ரூபா : இவ்வாரம் வர்த்­த­மானி அறி­வித்தல்.!

Published By: Robert

11 Dec, 2017 | 09:39 AM
image

தேங்­காய்க்­கான கட்­டுப்­பாட்டு விலை 75 ரூபா­வாக நிர்­ண­யிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அது தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்தல் இவ்­வாரம் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தா­கவும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். 

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு அவர் கருத்துத் தெரி­விக்­கையில்,

வரட்சி கார­ண­மா­கவே தேங்­காயின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் கிரா­மப்­பு­றங்­களில் தேங்­காய்க்கு பாரி­ய­ளவில் நெருக்­க­டி­யில்லை. எனினும் நக­ரப்­பு­றங்­க­ளி­லேயே அது அதிக விலைக்கு விற்­கப்­ப­டு­கி­றது. 

தென்­னந்­தோப்­பு­க­ளுடன் தொடர்­பு­டைய அமைச்­சுகள் மூன்று உள்­ளன. அவற்­றுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தேங்­காயை கொள்­வ­னவு செய்து சதொச ஊடாக 65 ரூபா­வுக்கு விற்­பனை செய்­கிறோம். எனினும் அதற்கு நிலவும் கேள்­வி போது­மா­ன­தாக இல்லை.

எனவே ஜனா­தி­பதி தலை­மையில்  நாளை மாலை (இன்று) வாழ்க்கைச் செல­வு­களை ஆராயும் குழு கூட­வுள்­ளது. அதன்­போது தேங்­காயை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதா இல்லையா என்­பது தொடர்பில் தீர்­மா­னிக்­க­வுள்ளோம். 

மேலும் தேங்­காய்க்கு கட்­டுப்­பாட்டு விலையும் நிர்­ண­யிக்­க­வுள்ளோம். அதன்படி கட்டுப்பாட்டு விலை 75 ரூபாவாக அமையவுள்ளது. அதனை வர்த்தமானி மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02