இளம் பிள்ளைகள் மத்தியில் போசாக்கு மற்றும் ஆற்றலை தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்  (CBL)நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி தானிய ஆகார வர்த்தகநாமமான சமபோஷ தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பாடசாலை விளையாட்டு போட்டிகள் நாட்காட்டியில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் “சமபோஷ 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டித்தொடர் 2015” க்கு அனுசரணை வழங்கியது. 

இதற்கமைய, ஆடவர் பிரிவில் திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியை வீழ்த்தி கொழும்பு சாஹிரா கல்லூரியும் பெண்கள் பிரிவில் குருநாகல் க.வி.சி.க.மு.வ. மத்திய கல்லூரியை வீழ்த்தி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மஹஜன கல்லூரியும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டன. 

இறுதிச்சுற்று போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் 23 முதல் 25 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றன. இந்த போட்டியை இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சங்கம் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.

இந்த போட்டியின் வெற்றி குறித்து இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 

“கடந்த ஆறு ஆண்டுகளாக 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டிகளுக்கு சமபோஷ அனுசரணை வழங்கி வருவதுடன், இவ்வாண்டும் நாடளாவிய ரீதியிலான இப்போட்டிக்கு அனுசரணை வழங்கியதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 

பாடசாலைகளில் கால்பந்தாட்ட போட்டிகளை மேம்படுத்துவதே இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முக்கிய குறிக்கோள்களுள் ஒன்றாகவுள்ளதுடன், (CBL) போன்ற பெருநிறுவனங்களின் ஆதரவின்றி இத்தகைய குறிக்கோளினை நிச்சயமாக அடைய முடியாது. தொடர்ச்சியாக நாம் இணைந்து பங்காற்றவுள்ளதுடன், பாடசாலை மட்ட கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளோம்” என்றார்.

இந்தப் போட்டிகளில் நாடு முழுவதுமிருந்து 410 பாடசாலை ஆண்கள் அணிகளும், 160 பாடசாலை பெண்கள் அணிகளும் பங்குபற்றியிருந்தன. ஆரம்பச்சுற்று போட்டிகள் 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் 32 நிலையங்களில் இடம்பெற்றன. 

இந்த போட்டித்தொடரின் சிறந்த ஆண் வீரர் மற்றும் பெண் வீராங்கனை மற்றும் சிறந்த கோல் காப்பாளர் விருது போன்றன வழங்கப்பட்டன. மருதானை சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த எம்.சகீலுக்கு ஆண்கள் பிரிவில் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதும், குருநாகல் க.வி.சி.க.மு.க. காமினி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஹெஷனி சௌமியா ஜயசூரியவிற்கு பெண்கள் பிரிவில் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டன. 

இப் போட்டிகளில் மிக பெறுமதியான ஆண் வீரருக்கான விருது மருதானை சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த சஜிக் நவுஃபருக்கும், யாழ். மஹாஜனா கல்லூரியைச் சேர்ந்த கே.அர்ச்சிகாவிற்கு மிகப் பெறுமதி வாய்ந்த பெண் வீராங்கனைக்கான விருதும் வழங்கப்பட்டன.

ப்ளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும்ஃபிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில்,

 “நாடுமுழுவதும் உள்ள பாடசாலை மட்ட கால்பந்தாட்ட வீரர்களை அடையாளப்படுத்தும் 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டிகளுக்கு தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக அனுசரணை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

இளைஞர்களின் திறமைகளுக்கு ஆதரவு வழங்க எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து மேலும் பல உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு பங்களிப்பு வழங்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

இந்த போட்டிகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த ப்ளென்டி ஃபூட்ஸ்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் வசந்த சந்திரபால கால்பந்தாட்ட போட்டிகளுக்கான சமபோஷவின் பங்களிப்பு குறித்து தெரிவித்ததாவது,

 “கால்பந்தாட்ட போட்டிக்கு விட்டுக்கொடுப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சீரான ஊட்டச்சத்து ஆகியன தேவைப்படுகிறது. CBL நிறுவனத்தின் முன்னணி தானிய ஆகாரமான சமபோஷ உற்பத்தியில் கால்பந்தாட்ட வீரர்களுக்கு தேவையான புரதங்கள், காபோவைதரேற்று மற்றும் விற்றமின்கள் போன்ற அத்தியாவசிய போசாக்குகள் உள்ளடங்கியுள்ளன” என்றார்.

சமபோஷ வர்த்தகநாமமானது இளம் பிள்ளைகளுக்கு விசேடமாக விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளுக்கு தமது ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை 100% உள்நாட்டு மூலப்பொருட்கள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சோளம், அரிசி, சோயா மற்றும் பச்சைப் பயறு தானியங்கள் அடங்கிய சமபோஷ ஊடாக வழங்கி வருகிறது. சமபோஷ வர்த்தகநாமம் SLS-1036, ISO-22000, HACCP மற்றும் GMP போன்ற தரச்சான்றிதழ்களை கொண்டுள்ளது.