(எம்.சி.நஜிமுதீன்)

முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் முன்னெடுப்பதற்கான வழிவகை பற்றி யோசித்தோம். முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன இணைந்து செயற்படுவதன் மூலமே அவ்விலக்கை அடைந்துகொள்ள முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்தோம். அதற்கிணங்கவே ஐக்கிய மக்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். ஆகவே இக்கூட்டமைப்பு முஸ்லிம் அரசியலில் திருப்புமுனையாக அமையவுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி.ஹஸனலி தெரிவித்தார். 

அக்ககூட்டமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேய அவர் இதனைத் தெரிவித்தார்.