விசேட தேவையுடையோர்களுக்கான  பாடசாலையில் பயின்று வந்த 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பாக (65) வயது நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்த நபரை (08.12.2017) கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் சாந்தினி மீகொட முன்நிலையில் ஆஜர்படுத்தியப் போது  குறித்த நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

கம்பளை கல்கெடியாவ பகுதியில் மர ஆலையொன்றில் (பலகை மடுவம்) வேலை செய்து வந்த  குறித்த சந்தேக நபர்  சிறுமி தினமும் அவ்வழியே பாடசாலைக்குச் சென்று வருவதனை அவதானித்தே சம்பவ தினம் சிறுமியை ஏமாற்றி மடுவத்துக்குள் அழைத்துச் சென்றே குறித்த குற்றத்தை புரிந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது பாதிப்பிற்குள்ளான சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது குறித்த சிறுமி கடுமையான விதத்தில் வல்லுறவிற்கு உட்படுத்தப் பட்டுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.