காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் பேரணி

Published By: Robert

10 Dec, 2017 | 12:41 PM
image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை இன்று காலை நடாத்தினர். 

வட மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், "சர்வதேசமே எங்கள் பிரச்சினையை கையாள முன்வாருங்கள்" என்ற, கருப்பொருளில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, அங்கியிருந்து யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா சபை இணைப்பு அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. 

கைகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு, கண்ணீருடன் இந்த பேரணியில் பங்கேற்றனர். 

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில், அந்த அலுவலகத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்படும் போது, அதன் பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

தமக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் தாங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலையிருப்பதாகவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

தமது பிள்ளைகள் இன்னும் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் இன்னும் நம்புவதாகவும் தமது பிள்ளைகளை ஜனாதிபதி கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38