‘பள்ளிப்பருவத்திலே ’என்ற படத்தில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் சிற்பியின் மகன் புதுமுக நடிகர் நந்தன் ராமிற்கு தந்தையாக நடித்திருக்கிறார் மூத்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

இதில் என்ன புதுமை என்றால், மூத்த இயக்குநராக இருக்கும் இவர் இதுவரை தான் இயக்கும் படங்களிலும், மற்றவர்களின் இயக்கத்தில் உருவாகும் படங்களிலும் என ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்திருக்கிறார். ஆனால் ஹீரோவின் தந்தை வேடம் என்றால் வேண்டாம் என்று ஒதுங்கிவிடுவார்.

அவர் அதையும் கடந்து ஹீரோவின் தந்தையாக நடித்த படங்கள் இரண்டேயிரண்டு தான் ஒன்று ‘தங்கமகன்’ இந்தபடத்தில் தனுசின் அப்பாவாக நடித்திருந்தார். மற்றொன்று றெக்க. இதில் விஜய் சேதுபதியின் தந்தையாக நடித்திருந்தார். ஏன் தந்தை கேரக்டரில் நடிப்பதில்லை என்று கேட்ட போது,‘ அப்பா கேரக்டரில் நடிக்க தொடங்கினால் ஏராளமான வாய்ப்புகள் வந்து குவியும். அதன் பிறகு நடிப்பில் தான் கவனம் செலுத்த நேரிடும். எம்முடைய ஆசை படத்தில் இயக்குவதில் தான் இருக்கிறது. அதனால் அப்பாவாக நடிப்பதில்லை. வேறு கேரக்டர்கள் என்றால் ஒரிரு நாள் கால்ஷீட்டில் முடிந்துவிடும். அத்துடன் அப்பாவாக நடிக்கும் போது கொஞ்சம் உணர்ச்சிமயமாகவும் நடிக்கவேண்டியதிருக்கும். இப்படி பல காரணங்களினால் ஹீரோவின் தந்தையாக நடிக்க ஒப்புக்கொள்வதில்லை.

இருந்தாலும் பள்ளி பருவத்திலே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் இயக்குநர் வாசுபாஸ்கர் அமைத்திருந்த திரைக்கதை. அதனால் தான் அதில் 3வது முறையாக ஹீரோவின் தந்தையாக நடித்தேன்.’ என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

தகவல் : சென்னை அலுவலகம்