ஊழியர்கள் நாளைக்கு பணிக்குத் திரும்பாதவிடத்து அவர்களது வெற்றிடங்கள் புதியவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று போக்குவரத்துத் துறை பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவையாக புகையிரத சேவை அறிவிக்கப்பட்டதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு போக்குவரத்துத் துறை தொடர்ச்சியாக அறிவிப்புகளை விடுத்து வருகிறது.

நாளை (11) திங்கள் வரை அவர்களுக்கு அவகாசம் கொடுத்திருப்பதாகவும், அதற்குள் வேலைக்குத் திரும்பாதவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாகக் கருதப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சளைக்காத தொழிற்சங்கங்கள் நாளை மேலும் பல தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் இணைத்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, நாளை பணிக்குத் திரும்பாதவர்களின் வெற்றிடங்களுக்குப் புதியவர்களை நியமிக்கப் போவதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.