பனாகொடை இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று (9) பிற்பகல் சுமார் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முகாமினுள் அமைந்துள்ள குளம் ஒன்றுக்கான மின்சார வினியோகக் கட்டமைப்பைத் திருத்திக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த வீரர் பன்னிப்பிட்டிய, பலன்வத்தையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் என்றும் அவரது உடற்கூற்றியல் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.