கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக ஆக்டிக் கடலில் இருந்து,  இந்து சமுத்­திரம் வரை புதிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. வெறும் கடல் மட்டம் உயர்­வது மட்­டு­மல்ல,  பவன வெப்பம் அதி­க­ரித்து வருதல் மற்றும் துருவப் பனி­ம­லைகள் உரு­குதல் என்­பன பெரும் ஆபத்தை விளை­விக்க வல்­ல­ன­வாக உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. வளி மண்­டல வெப்பம் உயர்தல், தவிர மண்­ணையும் கட­லோ­ரங்­க­ளையும் வெகு­வாகப் பாதித்து பெரும்  எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருக்­கி­றது.

இவ்­வகைப் பாதிப்­பு­களில் கட­லோ­ரங்­களில் கொட்­டப்­படும் கழி­வுகள் பெரும் பங்­க­ளிப்புச் செய்­வதை சமீ­பத்­திய ஆய்­வுகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. கடலில் சேரும் நச்சு மாசு­களை மீன்கள் உண­வாக உட்­கொண்டு இறு­தியில் மனித சமூ­கத்தை வந்­த­டை­கின்­றன. வளி மண்­டல வெப்ப உயர்­வினால் துருவப் பனி­ம­லைகள் உருகி பனித் தட்­டு­க­ளி­டையே சிறைப்­பட்டுக் கிடக்க நச்சுப் பதார்த்­தங்கள் விடு­விக்­கப்­பட்டு கடல் நீரை வந்­த­டைந்து மாச­டையச் செய்­கின்­றன. சமீ­பத்­திய ஆய்­வின்­படி பனி தட்­டு­க­ளி­டையே சிறைப்­ப­டுத்­தப்­பட்டு கிடந்த மாசுகள் குறிப்­பாக கொடிய விஷ­மா­கிய பாத­ரசம் விடு­பட்டு கடலை வந்­த­டைந்து மீன்­க­ளுக்கு உண­வா­கின்­றன. மேலும் இவ்­வாறு மீனை உண்ணும் மனிதன் நஞ்­சூட்­டப்­ப­டு­கின்றான். எவ்­வா­றா­யினும் இப்­பி­ரச்­சினை சம­கா­லத்தில் மட்­டு­மல்ல, எதிர்­கா­லத்­திலும் தொடரும் சாத்­தியம் தென்­ப­டு­கின்­றது. ஒவ்­வொரு முறையும் வளி­மண்­டல வெப்பம் அதி­க­ரிக்கும் வேளை, பனித்­த­க­டுகள் உருகி மாசுகள் விடு­விக்­கப்­பட்டு, கடல் நீரை வந்­த­டையும் சாத்­தியம் காணப்­ப­டு­கி­றது.

முதன் முத­லாக பாத­ரச நஞ்­சினால் ஏற்­பட்ட பேரிடர் ஜப்­பானில் 20 ஆம் நூற்­றாண்டில் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. ‘மீன்­மற்றா’ குடா நாட்­டி­லுள்ள தொழிற்­சாலை ஒன்றில் கழிவுப் பொரு­ளாக மீதைல்­மேர்க்­குரி குடா நீரில் சேர்க்­கப்­பட்­டது. அதன் விளை­வாக அந்தக் குடா­நாட்டு கிரா­மங்­க­ளி­லுள்ள மக்கள் குறிப்­பாக மீனவ சமூகம் பெரும் பாதிப்­ப­டைந்­தது. ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் பெண்கள், குழந்­தைகள் உட்­பட நரம்புத் தளர்ச்­சியால் பாதிக்­கப்­பட்­ட­துடன் பலர் மர­ணத்தை தழுவிக் கொண்­டனர். இந்தச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து ‘குளோப்­ரீற்றி’ என்னும் நிறு­வனம் 140 நாடு­களைச் சேர்ந்த சூழல் நிபு­ணர்­களை ஒன்று கூட்டி கடல் நீரில் பாத­ரசம் கலப்­ப­தை­யிட்டு விவா­தித்து, அதைக் கட்­டுப்­ப­டுத்தும் வழி வகை­களை வெளி­யிட்­டனர். பற்றறிக் கழி­வுகள்,  உடைந்த உஷ்­ண­மா­னிகள், வாசனைத் திர­விய வெற்றுப் போத்­தல்கள், மற்றும் பாத­ரசம் உள்ள கழி­வு­களைக் கடலில் அகற்­று­வதை தடை செய்­தனர். மேலும் புதிய பாத­ரசம் அகழ்­வது தடை செய்­யப்­பட்­டது.

தற்­போது சக்திப் பிறப்­பாக்­கத்தில் நிலக்­கரி எரிக்­கப்­ப­டு­வ­தாலும், வாகனப் புகை­க­ளாலும் சிறிய அளவில் அகழ்தல் நட­வ­டிக்­கை­க­ளாலும் மற்றும் பல்­வேறு வழி­க­ளிலும் வளி மண்­டலம் மாச­டை­கின்­றது. 1970 இல் வளி­மண்­டல மாசுகள் உச்­சத்தை அடைந்­ததைத் தொடர்ந்து வளி­மண்­டல மாசு­களை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை  எடுக்­கப்­பட்­டது. புதுப்­பிக்கத் தக்க வளங்­க­ளா­கிய நீர் வீழ்ச்சி மின் பிறப்­பாக்கம், காற்­றாலை மற்றும் சூரிய சக்தி போன்­ற­வற்றை உப­யோ­கப்­ப­டுத்­தும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டது. இருப்­பினும் கால­நிலை மாற்றம் பெரிதும் கட்­டுப்­பாட்­டினுள் வந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

நாடு­க­ளி­டையே உள்ள வெப்ப வித்­தி­யா­சத்தால் கடலில் சுழி­யோட்­டங்கள் ஏற்­பட்டு கடல் மாசுகள் பல இடங்­க­ளுக்கும் பரவிச் சென்­றதை சமீ­பத்­திய ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. இதன் விளை­வாக கரை­யோரச் சமூகம் பெரும் அனர்த்­தத்தை எதிர்க் கொண்­டி­ருக்­கி­றது.

‘ஸ்டாங்’ என்னும் சீன ஆய்­வாளர் இமா­லய உச்­சியில் பனி மாதி­ரி­களைச் சேக­ரித்து மற்றும் குவாஹி ஆற்­றி­லுள்ள மீன் மாதி­ரி­களைச் சேக­ரித்து ஆய்­விற்கு உட்­ப­டுத்திப் பார்த்­ததில், அவற்றில் பாதரச நச்சு அதி­க­ளவில் இருப்­பதைக் கண்­ட­றிந்­துள்ளார். பனிப்­ப­ட­லங்­களில் அடை­பட்­டுக்­கி­டந்த மாசுகள், பாத­ரசம் உட்­பட விடு­பட்டு இமா­லய நதி­களை வந்து சேர்­கின்­றன.

இன்­னு­மொரு ஆய்வில் கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக அதிக மழை­வீழ்ச்சி ஏற்­பட்டு தரை வழி­யோடி நதி­களில் சேரும் நீர் சேதன மாசுகள் சென்று பிளாங்டன் தாவா­ரங்­களில் செறி­வ­டை­கின்­றன. இத்­தா­வ­ரத்தை மீன்கள் உண்ணும் போது நச்சுப் பதார்த்தம் மீன்­களைச் சென்­ற­டை­கின்­றன. மேலும் செந்­நி­ற­மான பெரு­வெள்ளம் கடலை அடையும் போது, மேற்­ப­ரப்பு செந்­நி­ற­ம­டைந்து, சூரிய ஒளியை ஆழ்­க­ட­லுக்குள் செல்­ல­வி­டாது தடை செய்­கின்­றது. ஆழ்­க­டலில் உள்ள தாவ­ரங்கள் சூரிய ஒளி கிடைக்­காது மடிந்­து­போக,  அங்கு பக்­டீ­றியா பெருக்­க­ம­டைந்து  நச்சப் பதார்த்­தங்கள் சேர்­கின்­றன. அதை மீன்கள் உண­வாக உட்­கொண்டு நச்சுத் தன்­மை­யு­டை­ய­தாக மாறு­கின்­றன.

கடல் மேற்­ப­ரப்­பி­லுள்ள வெப்ப  ஏற்றத் தாழ்­வினால், கடல் நீரில் பெரும் சுழி­யோட்­டங்கள் ஏற்­பட்டு, அதன் விளை­வாக கடல் மாசுகள் எல்லா இடங்­க­ளுக்கும் பர­வ­லாக கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. தற்­போது நாங்கள் நான்கு வெவ்­வேறு வகை­யான ஆய்­வு­களை மேற் கொண்டு எவ்­வாறு சேத­னப்­பொ­ருட்கள் குறிப்­பிட்ட இடங்­களில் சேர்­கின்­றன என ஆராய்ந்தோம். இதன் அடிப்­ப­டையில் எதிர்­கா­லத்தில் கால­நிலை மாற்­றத்தால் ஏற்­படும் பாதிப்புகளை ஆராய முற்பட்டுள்ளோம் என்கிறார் சூழலிய நிபுணர் பயோன். மேலும் இவ் ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நீர்நிலைகளில் கழிவுப் பொருட்கள் அகற்றுவதை யிட்டு புதிய சட்ட வரைவுகளைச் சிபார்சு செய்வோம்  இவ்வகை சட்டத்திட்டங்களால் நீர் நிலைகளில் மாசுகள் கட்டுப்படுத்தப்படுவதுமட்டு மல்லாது மீன்களில் நச்சுப் பதார்த்தங்கள் செறிவடைவது தடுக்கப்படும் என்கிறார் பயோன். உலகம் பூராகவும் வறிய மக்களின் தினசரி உணவாகிய மீனில் நச்சுப் பதார்த்தங்கள் சேர விடாது தடுப்பது எம் எல்லோரினதும் கடமையல்லவா?